sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வினாத்தாள் கசிவு : தேர்வு ஒத்திவைப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வினாத்தாள் கசிவு : தேர்வு ஒத்திவைப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வினாத்தாள் கசிவு : தேர்வு ஒத்திவைப்பு


UPDATED : மே 28, 2025 12:00 AM

ADDED : மே 28, 2025 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2025 12:00 AM ADDED : மே 28, 2025 10:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இண்டஸ்ட்ரியல் லா -தேர்வின் கேள்வித்தாள் வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இப்பல்கலையின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 106 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தற்போது கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடக்கிறது. இளம் வணிகவியல் துறையில் இண்டஸ்ட்டிரியல் லா என்ற பாடத்திற்கான தேர்வு நேற்று நடக்க இருந்தது. நேற்று காலை 99 மையங்களில் தேர்வு எழுத மாணவர்கள் வந்திருந்தனர்.

தேர்வு துவங்குவதற்கு சற்று முன்பாக தரப்பட்ட வினா தாள்கள் மாணவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டன. வினாத்தாள் ஏற்கனவே கசிந்துவிட்டதாகவும், அதனால் நேற்று நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வினாத்தாள்கள் திரும்ப பெறப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே நேற்று தேர்வு நடக்கவில்லை.

இண்டஸ்ட்டிரியல் லா என்ற பாடத்தின் தேர்வு வினாத்தாள் கசிந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்வினை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம் என பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மே 29 வரை கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடக்கவுள்ளது. எனவே தற்போது கசிந்த வினாத்தாளுக்கு பதில்க வேறு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்படும். அதனை தொடர்ந்து இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மே 30 அல்லது 31-ல் நடக்கும் எனவும் பல்கலைக்கழக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. பல்கலை தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து பல்கலை நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us