sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சன்சத் ரத்னா விருதுக்கு எம்.பி.,க்கள் தேர்வு; பத்திரிகையாளர் நுாருல்லா தலைமையில் குழு

/

சன்சத் ரத்னா விருதுக்கு எம்.பி.,க்கள் தேர்வு; பத்திரிகையாளர் நுாருல்லா தலைமையில் குழு

சன்சத் ரத்னா விருதுக்கு எம்.பி.,க்கள் தேர்வு; பத்திரிகையாளர் நுாருல்லா தலைமையில் குழு

சன்சத் ரத்னா விருதுக்கு எம்.பி.,க்கள் தேர்வு; பத்திரிகையாளர் நுாருல்லா தலைமையில் குழு


UPDATED : மார் 06, 2026 10:24 AM

ADDED : மார் 06, 2026 10:26 AM

Google News

UPDATED : மார் 06, 2026 10:24 AM ADDED : மார் 06, 2026 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
'சன்சத் ரத்னா' விருதுக்கு எம்.பி.,க்களை தேர்வு செய்ய, மூத்த பத்திரிகையாளர் நுாருல்லா தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருப்பப்படி, பார்லிமென்டின் இரு சபைகளிலும், சிறப்பாக செயல்படும் எம்.பி.,க்களுக்கு, 15 ஆண்டுகளாக, 'சன்சத் ரத்னா' எனப்படும், 'பார்லிமென்ட் ரத்தினம்' என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.

'பிரைம் பாயின்ட்' சீனிவாசன் நிறுவிய, 'சன்சத் ரத்னா' விருதளிப்பு குழு, இந்த விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

பார்லிமென்டில் கேட்கப்பட்ட கேள்விகள், விவாதங்களின் நேரம், தனி நபர் தீர்மானங்கள், வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில், 'சன்சத் ரத்னா' விருதுக்கு, எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த ஆண்டு விருதுக்கு, எம்.பி.,க்களை தேர்வு செய்ய, 'தினமலர்' நாளிதழ் தலைமை நிருபராக இருந்த ஆர். நுாருல்லா தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.

குழுவின் இணை தலைவராக ஆடிட்டர் மோகன், உறுப்பினர்களாக ஜெய்ப்பூர் நிம்ஸ் பல்கலை பேராசிரியர் டாக்டர் சரிக்கா, கல்வியாளர் மற்றும் ஏ.ஐ., நிபுணர் தீபா லெனின், தேசிய பென்ஷன் திட்ட துணைத் தலைவர் சுரேஷ், எம்.ஜி.ஆர்., நிகர்நிலை பல்கலை கழக ஏ.ஆர்.ஐ., ஆராய்ச்சி துறைத் தலைவர் ஹரிராம் சந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என, சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் நிறுவனர் பிரைம் பாயின்ட் சீனிவாசன், தேசியத் தலைவர் பிரியதர்ஷினி ராகுல் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us