சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு: சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர்கள் சாதனை
சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு: சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர்கள் சாதனை
UPDATED : மார் 07, 2026 01:24 PM
ADDED : மார் 07, 2026 01:28 PM
மத்திய குடிமைப்பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான 2026ஆம் ஆண்டின் இறுதித் தேர்வு முடிவுகள் மார்ச் 6ல் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர்கள் அகில இந்திய அளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்த ஆண்டு இறுதித் தேர்வில் மொத்தம் 958 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 202க்கும் மேற்பட்டோர் சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் பல்வேறு மையங்களில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களில் இந்த அகாடமியைச் சேர்ந்த 19 மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் 10 பேர் பெண்கள் என்பது மற்றுமொரு சிறப்பு.
தமிழகத்தின் சாதனையாளர்கள்
தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே, அகில இந்திய அளவில் 2வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பிரிலிம்ஸ் டெஸ்ட் சீரிஸ், இன்டர்வியூ புரோகிராம் மற்றும் சோசியாலஜி ஆப்ஷனல் போன்ற பயிற்சிகளைப் பெற்றவர்.
அதே போல், அகாடமியின் ராஜா மொஹிதீன், அகில இந்திய அளவில் 7வது இடத்தையும், தமிழக அளவில் 2வது இடத்தையும் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்ற சுமார் 60 பேரில், 39 பேர் சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியைச் சேர்ந்தவர்கள். இந்த 39 வெற்றியாளர்களில் 17 பேர் பெண்கள் ஆவர்.
சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயின்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களான அஜய் ஆர் ராஜ், ஜசீலா, காஜல் ராஜு மற்றும் சஞ்சய் ஆகியோர் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
