தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலக்கியத்துக்கு வாசிப்பு தான் முதல் படி! நுால் வெளியீட்டு விழாவில் பேச்சு

இலக்கியத்துக்கு வாசிப்பு தான் முதல் படி! நுால் வெளியீட்டு விழாவில் பேச்சு

இலக்கியத்துக்கு வாசிப்பு தான் முதல் படி! நுால் வெளியீட்டு விழாவில் பேச்சு


UPDATED : மார் 17, 2026 11:07 AM

ADDED : மார் 17, 2026 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2026 11:07 AM ADDED : மார் 17, 2026 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் எழுதிய, 'நான் பிழை' சிறுகதை நுால் வெளியீட்டு விழா, காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள சிருஷ்டி ஹாலில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் கரீம் தலைமை வகித்தார். எழுத்தாளர் முருகவேள் வெளியிட பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் ராமராஜ் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர்கள் நஞ்சில்நாடன், பவா செல்லத்துரை ஆகியோர் நுால் குறித்து கருத்துரை வழங்கினர்.

நுாலாசிரியர் ரவிச்சந்திரன் அரவிந்தன் ஏற்புரையில் பேசியதாவது:

இலக்கியத்தை பொறுத்தவரை வாசிப்பு தான் முதல் படி. நிறைய படிக்கும் போது உள்ளிருந்து புறப்படும் புதிய எண்ணங்கள், என்னை எழுத துாண்டுகின்றன. என்னை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் நான் நுட்பமாக கவனிக்கிறேன். அந்தந்த நேரத்தில் எனக்குத் தோன்றும் எண்ணங்களையும், உணர்வுகளையும் கதைகளாக பதிவு செய்கிறேன்.

பாரதி சொன்னது போல் என் எழுத்தை 'சொல் புதிது, சுவை புதிது சோதி மிக்க நவ கவிதை' என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பாரதி ஒரு ஞானச்சுடர், அந்த வெளிச்சத்தில் தான் நான் இலக்கியத்துக்குள் பயணிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

எழுத்தாளர் ஷர்மிளா, கவிஞர் தங்கமுருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us