sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜே.இ.இ., தேர்வில் சாதனை படைத்த செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

/

ஜே.இ.இ., தேர்வில் சாதனை படைத்த செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ஜே.இ.இ., தேர்வில் சாதனை படைத்த செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ஜே.இ.இ., தேர்வில் சாதனை படைத்த செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


UPDATED : ஏப் 24, 2026 12:16 PM

ADDED : ஏப் 24, 2026 12:17 PM

Google News

UPDATED : ஏப் 24, 2026 12:16 PM ADDED : ஏப் 24, 2026 12:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
ஜே.இ.இ., முதன்மை தேர்வு, இரண்டாம் அமர்வு முடிவு, கடந்த, 20ல் வெளியானது. அதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செயல்படும் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அசத்தினர். அதன்படி பார்கவன், 99.91 சதவீத மதிப்பெண், அபிஷேக் விஷ்ணு, 99.82, சோமேஸ்வரா, 99.59, ஸ்ரீதர்ஷன், 99.45 ஆகியோர் முறையே, முதல், 4 இடங்களை பிடித்தனர்.

இவர்கள் அத்தேர்வில் மாநில தரவரிசைப் பட்டியவில் இடம் பிடித்துள்ளனர். மேலும் சேலம் பள்ளி, மாவட்டத்தில் முதன்மை மதிப்பெண் பெற்றுள்ளது. அத்துடன் நாமக்கல், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் முதலிடம் பிடித்துள்ளது.

தேர்வு எழுதிய, 62 மாணவர்களில், 21 சதவீதம் பேர், நாட்டின் சிறந்த ஐ.ஐ.டி.,க்களில் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர். 44 சதவீத மாணவர்கள், என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஜி.எப்.டி.ஐ.,க்களில் சேர தகுதி பெற்றனர். தவிர, 81 சதவீத மாணவர்கள், 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 98 சதவீத மாணவர்கள், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த குறிப்பிடத்தக்க மாவட்ட அளவில், முதல் நிலை சாதனையை முன்னிட்டு, நேற்று முன்தினம், பள்ளி கலையரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. அதில் சாதனை மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நினைவுப் பரிசுகள் வழங்கி, பொன்னாடைகள் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, செந்தில் குழும தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செயலர் தனசேகர், தாளாளர் தீப்தி, முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி, நிர்வாக அதிகாரி பிரவீன் குமார், பயிற்சி திட்ட சி.இ.ஓ., சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார், ஆசிரியர்களும், மாணவர்களை பாராட்டினர்.






      Dinamalar
      Follow us