அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் புதிய மாணவர்கள் சேர்க்கை துவக்கம்
அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் புதிய மாணவர்கள் சேர்க்கை துவக்கம்
UPDATED : மே 18, 2026 10:52 PM
ADDED : மே 18, 2026 10:54 PM
வால்பாறை:
அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், புதிய மாணவர்கள் சேர்க்கை துவங்கியது.
வால்பாறை அரசினர் தொழில் பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
வால்பாறையில், 2026 - 27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரிசியன், பிட்டர், பேஷன்டெக்னாலஜி உள்ளிட்ட ஐந்து பாடப்பிரிவுகளின் கீழ், பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில், ஆண்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரை சேரலாம்.
பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேர மாணவர்கள் எந்தவித கட்டணமும் கட்ட தேவையில்லை. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு, சீருடை மற்றும் மாதம் தோறும் கல்வி உதவித்தொகையாக, 750 ரூபாய் வழங்கப்படுகிறது. இது தவிர தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம், 1000 ரூபாய் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
