இந்திய விமானப் படையின் குரூப் எக்ஸ், ஒய் வீரர்கள் தேர்வு
இந்திய விமானப் படையின் குரூப் எக்ஸ், ஒய் வீரர்கள் தேர்வு
UPDATED : ஜூன் 24, 2011 12:00 AM
ADDED : ஜூன் 24, 2011 10:08 AM
சென்னை தாம்பரம் விமானநிலையத்தில், எக்ஸ் மற்றும் ஒய் தொழிற்பிரிவுகளில் படைவீரராக பணியாற்றுவதற்கான உடற்திறன், எழுத்துத் தேர்வு ஜூலை 18, 20 ல் நடக்கிறது.
குரூப் ஒய் நான் டெக்னிக்கல் பிரிவுக்கு, பிளஸ் 2 எந்தப் பிரிவிலும் 50 சதவீத மதிப்பெண் அல்லது அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் பாடத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஜூலை 18ல் காலை 6 முதல் 10 மணிக்குள் தேர்வு நடத்தப்படும்.
குரூப் எக்ஸ் டெக்னிக்கல் பிரிவுக்கு, பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஐ.டி., டிப்ளமோ பாடத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஜூலை 20ல் காலை 6 முதல் 10 மணிக்குள் தேர்வு நடத்தப்படும்.
அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மூன்று நகல்கள், பென்சில், ரப்பர், கருப்பு, நீலநிற பேனா, இரண்டு வெள்ளை கவர், பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள் ஏழு, உடற்திறன் தேர்வுக்கான விளையாட்டு சீருடையுடன் வரவேண்டும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 01.7.90 முதல் 30.9.94க்குள் பிறந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்2 படிக்காதவர்கள், இருப்பிடச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். திறமையின் அடிப்படையில் எழுத்து மற்றும் உடற்திறன் தேர்வில் தேறியவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு http://www.indianairforce.nic.in இணையதளத்திலோ அல்லது 044 - 2279 1853, 2239 6565 ல் தொடர்பு கொள்ளலாம்.
