தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒ.பி.சி., காலி இடங்களை பொதுப் பிரிவிலிருந்து நிரப்ப உச்சநீதிமன்றம் கெடு!

ஒ.பி.சி., காலி இடங்களை பொதுப் பிரிவிலிருந்து நிரப்ப உச்சநீதிமன்றம் கெடு!

ஒ.பி.சி., காலி இடங்களை பொதுப் பிரிவிலிருந்து நிரப்ப உச்சநீதிமன்றம் கெடு!


UPDATED : அக் 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எனவே, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான காலி இடங்களில் பொதுப்பிரிவில் இதுவரை இடம் கிடைக்காமல் உள்ள மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை காலியாக விட்டு வைக்கக்கூடாது என்பதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பஸ்யாத், ஆர்.வி. ரவீந்திரன், சி.கே. தாகூர், தல்வீர் பண்டாரி ஆகியோரடங்கிய பெஞ்ச் தெளிவுபடுத்தியுள்ளது.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் இடம் பெறுவதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் 10 சதவீதம் குறைவாக இருக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற பெஞ்ச் கூறியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் காலி ஏற்படும் இடங்களை அடுத்த மூன்று மாத காலத்திற்குள் பூர்த்தி செய்ய அனுமதி அளிக்க வேண்டும். அதன்பின் காலியாக இருக்கும் இடங்களுக்கு பொதுப் பிரிவு மாணவர்களைச் சேர்க்கலாமா என்பது குறித்து சொலிசிட்டர் ஜெனரல், நீதிபதிகளிடம் கேட்டார். அவ்வாறு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் இயக்குநர் பி.வி. இந்திரேசன் தொடர்ந்த இந்த வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us