கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா?: இன்ஜியரிங் மாணவர்கள் கவலை!
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா?: இன்ஜியரிங் மாணவர்கள் கவலை!
UPDATED : அக் 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
2007ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 70 பேருக்கு வேலைவாய்ப்புக் கடிதம் அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் தங்களது படிப்பை முடித்து விட்டனர். அவர்களை வேலைக்கு எடுத்த விப்ரோ, சி.டி.எஸ்., உள்ளிட்ட நிறுவனங்கள் மேலும் மூன்று மாதங்கள் பொறுத்திருக்கும்படி இந்த மாணவர்களிடம் கூறிவிட்டது. தாங்கள் உத்தேசித்துள்ள ஆண்டு வளர்ச்சி விகித்தை எட்டிய பிறகு, காலியிடங்களின் அடிப்படையிலேயே புதியவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்று அந்த நிறுவனங்கள் கூறிவருவதாகத் தெரிகிறது.
இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில் தொடர்ந்து இருக்க விரும்பாத மாணவர்கள், வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தயாராகி வருகின்றனர்.
ஜூன் மாதம் படிப்பை முடித்த இந்த மாணவர்கள் ஜூலை மாதம் வேலையில் சேர்ந்திருக்க வேண்டும். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு எடுத்து நிறுவனங்கள் தங்களது முடிவை மறு பரிசீலனை செய்யுமோ அல்லது கொடுத்த வேலைவாய்ப்புக் கடிதத்தை ரத்து செய்து விடுமோ என பல மாணவர்கள் கவலைப்படுகின்றனர் என்று உஸ்மானியா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு சேவைப் பிரிவு இயக்குநர் மாருதி மோகன் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த நிறுவனங்களில் எப்போது சேர வேண்டியதிருக்கும் என்பதை நவம்பர் மாதம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்து விட்டதால், வேறு நிறுவனங்களில் சேர விண்ணப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனவே, ஏற்கெனவே கிடைத்த வேலையை நம்பி, அது எப்போது வரும் என்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் அந்த இன்ஜினியரிங் மாணவர்கள்.
