"நாங்கள் விடுதி தருகிறோம்; நீங்கள் பாதுகாப்பு தாருங்கள்": ம.பி.யில் சர்ச்சை
"நாங்கள் விடுதி தருகிறோம்; நீங்கள் பாதுகாப்பு தாருங்கள்": ம.பி.யில் சர்ச்சை
UPDATED : பிப் 06, 2013 12:00 AM
ADDED : பிப் 06, 2013 07:33 AM
மத்திய பிரதேச மாநிலத் தில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. போபாலில், நடந்த விழாவில், அம்மாநில, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், கன்வார் விஜய் ஷா, பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசியதாவது: பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவியர் தங்குவதற்கு, அரசு சார்பில், விடுதி அமைத்து தர, தயார். ஆனால், அந்த விடுதிகளில் தங்கும் மாணவியரின் பாதுகாப்புக்கு, அவர்களின் பெற்றோர்தான் பொறுப்பை ஏற்க வேண்டும்.
இதுதொடர்பாக, மாணவியரின் பெற்றோர், எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி எழுதித் தர வேண்டும். மாணவியர் தங்கும் விடுதிக்கான வாடகை, தண்ணீர், மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், அரசு ஏற்கும்.
அவர்களின் பாதுகாப்புக்கான பொறுப்பு, அவர்களின் பெற்றோரைச் சார்ந்தது. அவ்வாறு, அரசு சார்பில், விடுதி அமைக்கப்பட்டால், அதில் தங்கும் மாணவியர், இரவு, 8:00 மணிக்குள், விடுதிக்கு திரும்பிவிட வேண்டும். இவ்வாறு, கன்வார் விஜய் ஷா பேசினார்.
அவரின் இந்த பேச்சுக்கு, எதிர்க்கட்சியினர், பெண்கள் அமைப்புகள், கண்டனம் தெரிவித்துள்ளன.
