தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை அரசு கல்லூரி மாணவர்கள் லண்டன் பல்கலையில் படிக்க தேர்வு

கோவை அரசு கல்லூரி மாணவர்கள் லண்டன் பல்கலையில் படிக்க தேர்வு

கோவை அரசு கல்லூரி மாணவர்கள் லண்டன் பல்கலையில் படிக்க தேர்வு


UPDATED : மார் 22, 2013 12:00 AM

ADDED : மார் 22, 2013 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2013 12:00 AM ADDED : மார் 22, 2013 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசு மற்றும் லண்டன் பல்கலைகழகமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 25 மாணவர்கள் லண்டன் பல்கலையில், ஒரு பருவம் முழுவதும் படிக்க, வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் செல்ல உள்ளனர்.

இதற்காக, லண்டனில், ஐந்து பல்கலைக்கழகங்களுடன், அரசு,புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அரசு கலை கல்லூரிகளில், முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களில், 25 பேர் மற்றும் ஆசிரியர்கள், 5 பேர், இதற்காக, தேர்வு செய்யப்படுவர் என, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மையம் அறிவித்து இருந்தது.

இதை தொடர்ந்து, இரண்டு கட்டங்களாக, எழுத்து மற்றும் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில், 32 மாவட்டங்களில், 62 அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளன. இக்கல்லூரிகளில் இருந்து தேர்வு பெற்ற, 25 மாணவர்களில், 6 மாணவர்கள், கோவை அரசு கலை கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us