சாய்ந்து விழும் நிலையில் மின் மாற்றி: பள்ளி மாணவர்கள் அச்சம்
சாய்ந்து விழும் நிலையில் மின் மாற்றி: பள்ளி மாணவர்கள் அச்சம்
UPDATED : மார் 25, 2013 12:00 AM
ADDED : மார் 25, 2013 10:44 AM
திருக்கழுக்குன்றம்: கோரப்பட்டு கிராமத்தில், பள்ளி அருகே உள்ள மின் மாற்றி, சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால், மாணவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனூர் ஊராட்சி,கோரப்பட்டு கிராமத்தில் துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இதில், 700 மாணவ மாணவியர் படிக்கின்றனர். பள்ளி கட்டடம் அருகே செல்லும்சாலையில், அப்பகுதிக்கான மின் மாற்றி அமைந்துள்ளது. இதில், கம்பங்கள் சிதிலமடைந்து, மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது: "பள்ளி கட்டடம் அருகில் உள்ள மின் மாற்றியின் கம்பங்கள், சிமென்ட பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின் மாற்றி அருகில் சில அடி தூரத்தில் அமைந்துள்ள மின் கம்பம், மிகவும்சேதமடைந்து சாய்ந்துள்ளது. அதிலிருந்து செல்லும், உயர் அழுத்த மின் கம்பிகள்,சாலையில் தாழ்வாக செல்கின்றன.
மின்மாற்றி அமைந்துள்ள பகுதியில், மின் கசிவு ஏற்படுகிறது. அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, பழுதடைந்த மின் கம்பத்தை அகற்ற, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
