தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெண்கள் உயர்ந்த பதவி வகித்து சொந்த காலில் நிற்க வேண்டும்

பெண்கள் உயர்ந்த பதவி வகித்து சொந்த காலில் நிற்க வேண்டும்

பெண்கள் உயர்ந்த பதவி வகித்து சொந்த காலில் நிற்க வேண்டும்


UPDATED : ஏப் 17, 2013 12:00 AM

ADDED : ஏப் 17, 2013 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2013 12:00 AM ADDED : ஏப் 17, 2013 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலாயுதம்பாளையம்: "ஒவ்வொரு பெண்ணும் கல்வி பயின்று மிக உயர்ந்த பதவி வகித்து சொந்தக் காலில் நிற்கும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்," என ஐ.ஜி., சைலேந்திரபாபு கல்லூரி விழாவில் பேசினார்.

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. 205 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி ஐ.ஜி., சைலேந்திரபாபு பேசியதாவது:

"கல்வி என்பது மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு பெண்ணும் கல்வி பயின்று மிக உயர்ந்த பதவி வகித்து சொந்தக்காலில் நிற்கும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம். மாணவிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டும், நாளிதழ்களை படித்து உலக அறிவையும், பொது அறிவையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us