தாகத்தால் தவிக்கும் மாணவர்கள்; ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டுகோள்
தாகத்தால் தவிக்கும் மாணவர்கள்; ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டுகோள்
UPDATED : ஆக 19, 2013 12:00 AM
ADDED : ஆக 19, 2013 10:57 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளிலுள்ள குடிநீர் தொட்டிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் இணைப்பு வழங்க தமிழக ஆசிரியர் கூட்டணியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சென்னகேசவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள குடிநீர் தொடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொரும்பாலான பள்ளிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை.
மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், மாணவ, மாணவியர் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் சில பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஜல்மணி இயந்திரமும் பழுதடைந்துள்ளது.
புளோரைடு பாதிப்பினால் பள்ளி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி வரும் சூழலில் பள்ளிகளுக்கு உடனடியாக ஒகேனக்கல் குடிநீர் இணைபபினை வழங்கி பாதுகாப்பான குடிநீர் கிடைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
