தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை வசமா ஜி.சி.டி.,? ஆசிரியர், மாணவர் போராட முடிவு

அண்ணா பல்கலை வசமா ஜி.சி.டி.,? ஆசிரியர், மாணவர் போராட முடிவு

அண்ணா பல்கலை வசமா ஜி.சி.டி.,? ஆசிரியர், மாணவர் போராட முடிவு


UPDATED : டிச 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக்கல்லூரி (ஜி.சி.டி.,), தொழிற்கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியை, கோவை அண்ணா பல்கலையின்கீழ் கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். சென்னையில் செயல்பட்ட அண்ணா பல்கலை நிர்வாக வசதிக்காக  பிரிக்கப்பட்டு, கோவை, நெல்லை, திருச்சியில் அமைக்கப்பட்டது.
ஜி.சி.டி., கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக அண்ணா பல்கலை செயல்படத் துவங்கியது. தற்போது இப்பல்கலை வளாகம், பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்திலுள்ள ஒரு தனியார் மில்லில் செயல்பட்டு வருகிறது. கோவை அண்ணா பல்கலை துவக்கப்பட்டதில் இருந்து, ஜி.சி.டி., கல்லூரியை,  தனது நிர்வாகத்தின்கீழ் கொண்டுவர கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறது.
‘பல்கலை கட்டுப்பாட்டின்கீழ் வந்தால், கல்விக் கட்டணம் அதிகமாக உயரும்’ எனக்கூறி, 4,000 மாணவ, மாணவியர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இப்பிரச்னை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இக்கல்லூரியை மீண்டும் கையகப்படுத்த பல்கலை நிர்வாகம் கடும் முயற்சி செய்து வருகிறது. வரும் ஜன., 6ம் தேதி கல்லூரி, பல்கலை வசமாகும் என பல்கலையச் சேர்ந்தவர்கள் இப்போதே பேசத்துவங்கியுள்ளனர். இதனால், ஜி.சி.டி., கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களை ஒன்றுதிரட்டி மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
பருவத்தேர்வு விடுமுறைக்குப்பின், மாணவ, மாணவியருக்கு கல்லூரி டிச. 17ம் தேதி முதல் மீண்டும் செயல்படவிருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us