தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓ.பி.சி., வருமான வரம்பு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

ஓ.பி.சி., வருமான வரம்பு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

ஓ.பி.சி., வருமான வரம்பு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்


UPDATED : டிச 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சலுகை பெறுவதற்கு வருமான வரம்பு ரூ.2.5 லட்சமமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த கிரிமீலேயர் வரம்பை ரூ.4.5 லட்சமாக உயர்த்தி அக்டோபர் 13ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பேராசிரியர் பி.வி. இந்திரேசன் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
கிரீமிலேயர் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் ஜனவரி மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us