தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ.சி.டி.இ., மெத்தனம்: நாடாளுமன்ற நிலைக் குழு கண்டனம்!

ஏ.ஐ.சி.டி.இ., மெத்தனம்: நாடாளுமன்ற நிலைக் குழு கண்டனம்!

ஏ.ஐ.சி.டி.இ., மெத்தனம்: நாடாளுமன்ற நிலைக் குழு கண்டனம்!


UPDATED : டிச 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வி வணிகமாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) நடவடிக்கை எடுக்க இயலாத நிலையில் இருப்பதையும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது ஏ.ஐ.சி.டி.இ., நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதோ அல்லது அந்தக் கல்வி நிறுவனங்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவதுடன் மட்டும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி நின்றுவிடாது என்பதையும் நிலைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏராளமான கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன. அவை எந்தக் கண்காணிப்பும் இல்லாமல் இருக்கின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் கட்டணத்தை நிர்ணயம் செய்யவும் அட்மிஷனைக் கண்காணிக்கவும் மாநில அரசுகளால் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதாக இல்லை என்பதையும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கல்வி வணிகமயமாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளின் அடிப்படையில் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு யோசனை கூறியுள்ளது.


பேஷன் டெக்னாலஜி, ஹாஸ்பிடாலிட்டி, மீடியா டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி, நியுக்கிளியர் டெக்னாலஜி, ஸ்பேஸ் டெக்னாலஜி ஆகிய உருவாகி வரும் புதிய துறைகளையும் கொண்டு வர வேண்டும் என்ற ஏ.ஐ.சி.டி.இ.,யின் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்றக் குழு, தற்போதுள்ள பாடப்பிரிவுகளையே திருப்திகரமாக நிர்வாகம் செய்ய முடியாத நிலையில், மேலும் புதிய புதிய பாடப்பிரிவுகளையும் சேர்த்து நிர்வாகம் செய்ய முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

தொழில்நுட்பக் கல்வியின் நிலைமை குறித்து இதுவரை எந்த சர்வேயும் மேற்கொள்ள ஏ.ஐ.சி.டி.இ., நடவடிக்கை எடுக்காதது குறித்தும் நிலைக்குழு குறை கூறியுள்ளது.

தற்போது 62 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் செயல்பட்டு வருவது கவலையளிக்கும் விஷயமாகும். இதுபோன்ற கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடமிருந்து ஏ.ஐ.சி.டி.இ., அமைப்புக்கு புகார்களும் வந்துள்ளன.

எனினும், ஏ.ஐ.சி.டி.இ., எடுத்த ஒரே நடவடிக்கை, அந்த அங்கீகாரம் பெறாத கல்வி நிலையங்களின் பட்டியலை வெப்சைட்டிலும் பத்திரிகைகளிலும் வெளியிட்டதுதான். அத்துடன், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளையும் யூனியன் பிரதேச அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது  என்றும் நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் நமது நாட்டில் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதைக் கட்டுப்படுத்த தகுந்த விதிமுறைகளை ஏ.ஐ.சி.டி.இ., உருவாக்க வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us