தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மலிவு விலையில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம்: அண்ணா பல்கலை. சாதனை!

மலிவு விலையில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம்: அண்ணா பல்கலை. சாதனை!

மலிவு விலையில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம்: அண்ணா பல்கலை. சாதனை!


UPDATED : டிச 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டயோடுகளைப் பயன்படுத்தி அல்ட்ரா வயலட் கதிர்களை ஊடுருவச் செய்து தண்ணீரில் உள்ள கிருமிகளை அழித்து சுத்திகரிப்பதற்கான தொழில்நுட்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்தின் படிக வளர்ப்பு மையம் (கிரிஸ்டல் குரோத் சென்டர்) உருவாக்கியுள்ளது.


சென்னை மெட்ரோ வாட்டர் வழங்கும் குடிநீரை இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று இந்த ஆய்வாளர்கள் குழுவின் தலைவர் பேராசிரியர் கிருஷ்ணன் பாஸ்கர் தெரிவித்தார்.

தற்போது மார்க்கெட்டில் பல வகையான வாட்டர் பியூரிபையர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சாதாரண மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத அளவுக்கு விலை அதிகமாக உள்ளது. ஆனால், அதிக அளவில் உற்பத்தி செய்தால் அண்ணா பல்கலைக்கழகம் தண்ணீரை சுத்திகரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு டயோடை ரூ.20க்கு கிடைக்கச் செய்ய முடியும். அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய இந்தத் தொழில்நுட்பத்தை தொழில் நிறுவனங்களுக்கு அளித்து தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என்கிறார் பேராசிரியர் ஜானகிராமன் குமார்.


பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகளின் பலன்களை சாதாரண மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதிதான் இந்த தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us