தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை அண்ணா பல்கலை.யில் முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்!

சென்னை அண்ணா பல்கலை.யில் முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்!

சென்னை அண்ணா பல்கலை.யில் முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்!


UPDATED : டிச 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 137 இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் இந்த புதிய பாடத்திட்டம் 2009-10 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.


தமிழகத்தில் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் பொதுவான பாடத்திட்டத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, திஅதன்படி, முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல அடுத்தடுத்த செமஸ்டர்களுக்கும் பொது பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


கிண்டி பொறியியல் கல்லூரியில் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட் என்ற முதுநிலைப் படிப்பு புதிதாகத் தொடங்கப்படுகிறது. இப்படிப்பில் 60 மாணவர்கள் சேர்க்கப்படுவர். குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் எம்.இ., ஸ்பேஸ் டெக்னலாஜி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்ச்சர் மையத்தில் எம்.ஆர்க்., (அட்வான்ஸ்ட் ஆர்க்கிடெக்ச்சர்) ஆகிய படிப்புகளும் புதிதாகத் தொடங்கப்படும். இந்த இரண்டு புதிய படிப்புகளிலும் தலா 25 மாணவர்கள் வீதம் சேர்க்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.


மதிப்பெண்களுக்குப் பதிலாக கிரேடிங் முறையைக் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல ஆன்லைன் மூலம் தேர்வு வினாத்தாள்களை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.


ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதில் நாட்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடத்தில் உள்ளதாக பர்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.9 கோடி வழங்க உள்ளது. 500 மாணவர்கள் தங்குவதற்கு ஏற்ப தற்போது புதிதாக தங்கும் விடுதி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த 4 மாதங்களில் மேலும் 600 மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதிகள் செய்யப்பட்டு விடும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் குரோம்பேட்டை வளாகத்திலும் ஆய்வகத்திற்கான கட்டவசதிகள் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன  என்றார் மன்னர் ஜவஹர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us