வகுப்பறை, அறிவியல் ஆய்வகத்தை ஒருங்கிணைக்கும் கல்வி திட்டம் அறிமுகம்
வகுப்பறை, அறிவியல் ஆய்வகத்தை ஒருங்கிணைக்கும் கல்வி திட்டம் அறிமுகம்
UPDATED : டிச 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஆய்வகத்தை வகுப்பறைக்கே கொண்டுவரும் புதுமையான திட்டத்தை இந்தியாவின் என்.ஐ.ஐ.டி., மற்றும் சர்வதேச அளவில் அறிவியல் கல்வியில் முன்னணி வகிக்கும் போரியர் சிஸ்டம்ஸ் ஆகியவை இணைந்து தொடங்கியுள்ளன. இந்தியாவில் உள்ள பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் என்.ஐ.ஐ.டி., மற்றும் போரியர் நிறுவனம் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
இதுகுறித்து என்.ஐ.ஐ.டி., பள்ளி கல்வி தீர்வுகள் தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் போரியர் சிஸ்டம்ஸ் முதன்மை செயல் அதிகாரி டோவ் புரூகர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளி படிப்பில் அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்கள் மிக முக்கியமானவை. இவற்றில் அறிவியல் பாடத்தில் பள்ளி மாணவ, மாணவியர் எளிதில் சோதனை மேற்கொள்ள போரியர் நிறுவனம் வடிவமைத்துள்ள நோவா5000 என்ற கருவி இதற்கு உதவுகிறது.
இவற்றில் 50 மாறுபட்ட அப்ளிகேசன்ஸ் பயன்படுத்திக்கொள்ள முடியும். இவற்றுடன் இணைந்த உபகரணங்களின் உதவியுடன் ஈரப்பதம், திசை, வரைபடம் வரைதல் உட்பட 160 ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இந்தகருவியை ‘டச் ஸ்கீரின்’ மூலம் எளிதாக இயக்கமுடியும். இந்த ‘ஸ்மார்ட் சயின்ஸ் ஸ்டேஷன்’ கையடக்கத்தில் இருப்பதால், மாணவர்கள் எளிதில் எங்கும் எடுத்து செல்லலாம். தண்ணீர் மாசு ஆளவுகளை மாணவர்களே நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.
இணையம், வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட் ஷீட் (எக்செல்), இமெயில் ஆகியவற்றை உள்ளடக்கி இருப்பதால் மாணவர்கள் ஆய்வின்போது தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம். அவற்றை பரிமாறிக்கொள்ளவும் முடியும். என்.ஐ.ஐ.டி., இ-குருவின் இந்த முழுமையான கல்வி திட்டத்தின் மூலம் இன்டரேக்டிவ் கிளாஸ், மேக்ஸ் லேப், ஐ.டி., விசார்ட் ஆகியவை முழுமையடைகிறது.
அனைத்து உபகரணங்களுடன் இத்திட்டத்தை பள்ளியில் முழுமையாக அமல்படுத்த ரூ.40 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும். முதல்கட்டமாக சோதனை முறையில் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. நாட்டிலுள்ள எந்த ஒரு பள்ளியும் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்பியல், வேதியல், உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடத்திட்டங்களில் ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இது உதவும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
