தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையிலான நவீன தகவல்தொடர்பு அமைப்பு உருவாக்கம்

மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையிலான நவீன தகவல்தொடர்பு அமைப்பு உருவாக்கம்

மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையிலான நவீன தகவல்தொடர்பு அமைப்பு உருவாக்கம்


UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM

ADDED : ஜூலை 11, 2014 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM ADDED : ஜூலை 11, 2014 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பேரிடர் காலங்களில், மீட்பு பணியில் ஈடுபடுவோர்க்கு உதவும் வகையிலான, நவீன தகவல் தொடர்பு அமைப்பை சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது.

ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன், 20 கோடி ரூபாய் செலவில், சென்னை ஐ.ஐ.டி., ஐதராபாத் ஐ.ஐ.டி., இந்திய வானிலை ஆய்வு மையம், ஐ.ஐ.டி., கான்பூர், ஐதராபாத் தேசிய புவியியல் ஆய்வு மையம் ஆகியவை இணைந்து, பேரிடர் காலங்களில், பேரிடருக்கு பிந்தைய தகவல் தொடர்பிற்காக, டிசாநெட் என்ற நவீன தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்கியுள்ளன.

தகவல் தொடர்பு எப்படிஇந்த அமைப்பின் முக்கிய கருவி பலுான் டிரான்ஸ்மிட்டர். 70 ச.மீ., (420 கிலோ) அளவில், ஹீலியம் நிரப்பப்பட்ட, 16 அடி விட்டம் கொண்ட பலுான், பூமியில் இருந்து, 35 முதல் 40 மீ., உயரத்தில் நிறுவப்படும். அதன் அடிபாகத்தில், அலைபேசி, வாக்கி டாக்கி உள்ளிட்ட கருவிகளின் சிக்னல்களை பெறும் டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்படும்.

அது அலைபேசி கோபுரம் போல் செயல்படும். அதில், ஜி.எஸ்.எம்., வைபை மற்றும் 4ஜி எல்.டி.இ., ஆகிய மூன்று தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த முடியும். அலைபேசிகள், வாக்கி டாக்கிகளில், தொடர்பு கொள்ளும்போது, பலுானில் கிடைக்கும் சிக்னல்கள், ஜி.எஸ்.எம்., துணை நிலையங்களில் உள்ள, நவீன கருவிகளில் தகவல்களாக மாற்றப்படும். அவற்றை கணினியில் காணலாம்.

சிறப்பம்சங்கள் என்ன?

வடகிழக்கு மாநிலங்கள், மாவேயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட வட மாநிலங்கள், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில், பேரிடர் காலங்களில் இந்த தகவல் தொடர்பு அமைப்பை பயன்படுத்த முடியும். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில், ரயில் விபத்துகள், பூகம்பம் ஆகியவை ஏற்படும் நேரங்களில், அலைபேசி கோபுரங்களில், சிக்னல் கோளாறு ஏற்பட்டால், இதை பயன்படுத்தலாம். அனைத்து வகையான ஜி.எஸ்.எம்., அலைபேசிகளையும் இந்த அமைப்பில் பயன்படுத்த முடியும்.

மீட்பு குழுவினருக்கு உதவும்

இதுகுறித்து சென்னை மின்னியல் துறை பேராசிரியர் டேவிட் கோவில் பிள்ளை கூறியதாவது: ரயில் விபத்து, பூகம்பம், புயல் உள்ளிட்ட பேரிடர் சம்பவங்கள் நிகழும்போது, அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் நிலை, எத்தனை பேர் உள்ளிட்ட விவரங்கள், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் அரசு அமைப்புகளுக்கு அவசியம்.

அந்த சம்பவங்கள் நிகழும் இடங்களில், அலைபேசி உள்ளிட்ட எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப சாதனங்களையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், டிசாநெட் அமைப்பை பயன்படுத்தி, பாதிப்பு குறித்த விவரங்களை, பேச்சு, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகிய தகவல்களாக, மீட்பு குழுவினர் பரிமாறி கொள்ளலாம். பலுான் டிரான்ஸ்மிட்டரில் 30 கி.மீ., சுற்றளவிற்கு தகவல்களை பரிமாறி கொள்ள முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்து என்ன...

அதேநேரம், மீட்பு படையினர் மட்டுமின்றி, பாதிக்கப்படும், மக்களும் இந்த தொழில்நுட்பத்தை நேரடியாக பயன்படுத்த, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, மீட்பு பணிக்கென்று, பிரத்யேக அலைவரிசை ஒன்றை உருவாக்க வேண்டும். பேரிடர் காலங்களுக்கென, அவசர தொலைபேசி எண்ணை அறிவித்து, அதனை இந்த தொழில்நுட்பத்துடன் இணைத்தால், மீட்பு பணி இன்னும் எளிதாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us