தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் கையில் நாட்டின் வளர்ச்சி: மக்கள் தொகை கருத்தரங்கில் விளக்கம்

மாணவர்கள் கையில் நாட்டின் வளர்ச்சி: மக்கள் தொகை கருத்தரங்கில் விளக்கம்

மாணவர்கள் கையில் நாட்டின் வளர்ச்சி: மக்கள் தொகை கருத்தரங்கில் விளக்கம்


UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM

ADDED : ஜூலை 12, 2014 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM ADDED : ஜூலை 12, 2014 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு தினப்பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

ஜூலை 11 முதல் 24 வரை இருவார விழாவாக உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி பேரணியை டி.ஆர்.ஓ. சதீஷ் துவக்கி வைத்தார். இப்பேரணி ஈரோடு அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது. பின்னர் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்குக்கு மாநகராட்சி துணை மேயர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.

மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த பேச்சுப்போட்டியில் வென்ற வேளாளர் கல்லூரி மாணவிகள் கீர்த்தனா, சிந்து, கோகிலா ஆகியோருக்கு டி.ஆர்.ஓ. சதீஷ், துணை மேயர் பழனிசாமி ஆகியோர் பரிசு வழங்கினர்.

டி.ஆர்.ஓ. சதீஸ் பேசியதாவது: கடந்த 1950களில் இருந்து இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. நமது நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகை பெருக்கம் பெரிய முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

ஐந்தாண்டு திட்டமாக ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறையும், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதை பிரதானமாக கொண்டு செயல்படுகிறது. இருப்பினும் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதால் 1990களில் இருந்து மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சி மாணவ, மாணவியர் கையில் உள்ளது. இயற்கைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்புண்டு. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.

தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் தற்போது கடும் வெயில் நிலவுகிறது. எனவே அனைவரும் தங்களால் முடிந்த வரை மரம் நடுவதை, கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். அதேபோல, மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டால் நாடு வளம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us