தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெங்களூரில் தேசிய அறிவியல் கருத்தரங்கு - மாணவர்களுக்கு அழைப்பு

பெங்களூரில் தேசிய அறிவியல் கருத்தரங்கு - மாணவர்களுக்கு அழைப்பு

பெங்களூரில் தேசிய அறிவியல் கருத்தரங்கு - மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM

ADDED : ஜூலை 17, 2014 02:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM ADDED : ஜூலை 17, 2014 02:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: வேளாண்மையில் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான ஆராய்ச்சி என்ற தலைப்பில், பெங்களூரில் நடக்க உள்ள தேசிய அறிவியல் கருத்தரங்கில், மாணவர்கள் பங்கேற்குமாறு, தேசிய அறிவியல் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெங்களூரில், தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இங்கு, பள்ளி மாணவர்களிடத்தில் புதிய கண்டு பிடிப்புகள் குறித்த நோக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில், வேளாண்மையில் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான ஆராய்ச்சி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இதில், 8 - 10ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்; ஆங்கிலம், இந்தி அல்லது பிற அங்கீகார மொழிகளில் மட்டுமே பேச வேண்டும். போட்டி நேரம் அதிகபட்சம், 6 நிமிடம்; நடுவர்கள் கேள்வி எழுப்ப 2 நிமிடம் எடுக்கப்படும்.

இதற்காக, போஸ்டர், சார்ட்ஸ், சிலைட்ஸ், புரஜெக்டர், கம்ப்யூட்டர் களை பயன்படுத்தலாம். அறிவியல் சார்ந்த படைப்புகளுக்கு 40 மதிப்பெண்; பேச்சாற்றலுக்கு 25 மதிப்பெண்; எழுத்து மற்றும் கேட்டலில் பதில் தரும் விதத்திற்கு 20 மதிப்பெண்; விஷுவல் பயன்பாட்டிற்கு 15 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படும்.

மாநில அளவில், முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு, பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி மியூசியத்தில், தேசிய அளவிலான போட்டி நடக்கும். இதில் வெற்றி பெறுவோருக்கு, மாதம், 2,000 ரூபாய் வீதம் ஓர் ஆண்டிற்கு உதவி தொகை வழங்கப்படும். சிறப்பு பரிசாக 9 நபர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு புத்தகம், அறிவியல் உபகரணங்கள் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

தேசிய கருத்தரங்கில் பங்கேற்க, மாநில அளவில், மூன்று கட்டங்களாக போட்டி நடத்த வேண்டும். அதன்படி, ஜூலை 31ல் பள்ளிகள் அளவிலும்; ஆக., 10ல் கல்வி மாவட்ட அளவிலும்; ஆக., 20ல், வருவாய் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்த வேண்டும். மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்களை மாநில போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

மாநில, யூனியன் பிரதேசம் அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள், பெங்களூரில் நடக்கும் தேசிய அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தேசிய அறிவியல் கழகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us