தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடியும் நிலையில் பள்ளிக் கட்டடம் - அச்சத்தில் மாணவர்கள்

இடியும் நிலையில் பள்ளிக் கட்டடம் - அச்சத்தில் மாணவர்கள்

இடியும் நிலையில் பள்ளிக் கட்டடம் - அச்சத்தில் மாணவர்கள்


UPDATED : ஆக 08, 2014 12:00 AM

ADDED : ஆக 08, 2014 01:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2014 12:00 AM ADDED : ஆக 08, 2014 01:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி அரசு உயர்நிலை பள்ளிக் கட்டடம் இடியும் நிலையில் உள்ளது. மாணவர்கள் அச்சத்தில் வகுப்புகளுக்கு செல்கின்றனர்.

இங்கு 288 மாணவர்கள் படிக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் 49.67 லட்சம் ரூபாயில், புதிதாக 10 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. கட்டி முடித்த சில மாதங்களில் பல பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டன. தற்போது கட்டடம் இடியும் நிலையில் உள்ளது. மோசமாக இருக்கும் அறைகளை தவிர மற்ற அறைகளில் வகுப்புகள் நடக்கின்றன.

சுப்ரமணி கூறியதாவது: தரமில்லாத கட்டுமானப் பொருட்களால் கட்டப்பட்டதால், கட்டிய ஒரு சில மாதங்களில் பல பகுதிகளில் விரிசல்கள் விழுந்தன. அஸ்திவாரம் சரியின்றி ஒரு பக்கமாக சரிந்த கட்டடத்தின் அடியில் பள்ளம் தோண்டி பில்லர் போட்டுள்ளனர். மழைக்குத் தாங்காமல் அதுவும் ஒருபுறம் சரிந்துள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது, என்றார்.

தலைமையாசிரியை விஜயலட்சுமி கூறியதாவது: அதிகாரிகள் உத்தரவின்படி, கட்டட நிபுணரின் உதவியுடன் 3 இடங்களில் பில்லர்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பில்லாத வகுப்பறைகளைப் பூட்டி விட்டோம். மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சப்படவேண்டியதில்லை, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us