பள்ளி வளாகத்திற்குள் ஊராட்சி அலுவலகம் - மாணவர்களுக்கு இடைஞ்சல்
பள்ளி வளாகத்திற்குள் ஊராட்சி அலுவலகம் - மாணவர்களுக்கு இடைஞ்சல்
UPDATED : ஆக 13, 2014 12:00 AM
ADDED : ஆக 13, 2014 12:18 PM
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி வளாகத்திற்குள் ஊராட்சி அலுவலகம் செயல்படுவதால் மாணவர்கள் கல்வித்திறன் பாதிக்கிறது.
திருநாவலூர் ஒன்றியம் ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த 1958ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி 1,896 சதுர அடி பரப்பளவில் துவங்கப்பட்டது. கடந்த 1997ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 237 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் இடப் பற்றாக்குறை உள்ளது.
சிறிய இடத்தில் உள்ள பள்ளி வளாகத்திலேயே ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சி நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக கிராம மக்கள் பள்ளி நடக்கும் நேரத்திலும் பேசிக் கொண்டு வருவதால், மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கிறது. ஊராட்சி அலுவலகத்தின் ஒரு பகுதியில் அங்கன்வாடி ஊழியர்கள் சமையல் செய்து, அங்கேயே உணவு வழங்குகின்றனர்.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையூறாக உள்ள ஊராட்சி அலுவலகத்தை பள்ளி வளாகத்தில் இருந்து இடமாற்றம் செய்ய ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
