தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் டி.பி., ஜெயின் கல்லுாரி சாம்பியன்
தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் டி.பி., ஜெயின் கல்லுாரி சாம்பியன்
UPDATED : நவ 04, 2014 12:00 AM
ADDED : நவ 04, 2014 11:40 AM
துரைப்பாக்கம்: தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில், டி.பி., ஜெயின் கல்லுாரி அணி, சாம்பியன் பட்டம் பெற்றது.
கோவை காருண்யா பல்கலை சார்பில், அதன் வளாகத்தில், தென்னிந்திய அளவிலான ஆண்கள் கபடி போட்டி நடந்தது. இறுதி போட்டியில், டி.பி., ஜெயின் கல்லுாரி அணி, 29-27 என்ற புள்ளி கணக்கில், மாநில கல்லுாரி அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றது.
அதற்கு முன் நடந்த போட்டிகளில், டி.பி., ஜெயின் கல்லுாரி அணி, 29-14 என்ற புள்ளி கணக்கில், தமிழ்நாடு விளையாட்டு பல்கலை அணியையும், காருண்யா அணியை, 6-5 என்ற புள்ளி கணக்கிலும் வென்றது. இதேபோல் சென்னை பல்கலைக்கு உட்பட்ட ஏ மண்டல கபடி போட்டி, சென்னையில் நடந்தது. இறுதி போட்டியில், டி.பி., ஜெயின் கல்லுாரி அணி, 29-18 என்ற புள்ளி கணக்கில், மாநில கல்லுாரி அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

