"மாணவர்களை, பிரச்னை பற்றி முன்பே அறியும் சிந்தனையாளர்களாக மாற்ற வேண்டும்"
"மாணவர்களை, பிரச்னை பற்றி முன்பே அறியும் சிந்தனையாளர்களாக மாற்ற வேண்டும்"
UPDATED : டிச 06, 2014 12:00 AM
ADDED : டிச 06, 2014 01:16 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: "மாணவர்கள் தனக்கு பின்னால் வரும் பிரச்னைகளை முன்பே அறியக்கூடிய சிந்தனையாளர்களாக மாற்ற வேண்டும், என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கிருஷ்ணன்கோவிலில் கலசலிங்கம் பல்கலையில் பள்ளி கல்வி துறை, அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டம் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது: கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களை சென்றடைய வேண்டும். அதற்கு தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும். குழந்தை பருவத்தில் தக்க கல்வியை தர வேண்டும். மதிப்பெண்ணை விட வாழ்க்கை கல்வியே அவசியம். மாணவர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
வாழ்க்கை திறன்களை பெற்ற நல்ல குடிமகன்களாக மாணவர்கள் மாற்றுபவர்களாக தலைமையாசியர்கள் திகழ வேண்டும். மாணவர்கள் தனக்கு பின்னால் வரும் பிரச்னைகளை முன்பே அறியக்கூடிய சிந்தனையாளர்களாக மாற்ற வேண்டும், என்றார்.
