தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை மாவட்டத்தில் 2014ம் ஆண்டில் 29 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

கோவை மாவட்டத்தில் 2014ம் ஆண்டில் 29 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

கோவை மாவட்டத்தில் 2014ம் ஆண்டில் 29 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு


UPDATED : டிச 06, 2014 12:00 AM

ADDED : டிச 06, 2014 01:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2014 12:00 AM ADDED : டிச 06, 2014 01:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு அமைப்பு சார்பில், 2014ம் ஆண்டில், 29 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில், மாநகராட்சியுடன் இணைந்து வார்டு, வாரியாக ஆய்வு பணிகள் விரைவில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், விவசாயம், தீப்பெட்டி, பட்டாசுத் தயாரிப்பு, செங்கல் சூளை, துணிக்கடை, கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில், குழந்தை தொழிலாளர்கள், அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் குறைந்த சம்பளத்தில், வார விடுமுறையின்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கோவை மாவட்டத்தில், பல்வேறு தொழில் நிறுவனங்கள், பேக்கரிகள், என பல இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, முதல்கட்டமாக, மாநகராட்சியுடன் இணைந்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இரண்டாம் கட்டமாக, மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் போலீஸ், டிராபிக் போலீஸ் ஆகியோருக்கும், தொடர்ந்து மின் கணக்கீட்டாளர்கள் உட்பட மக்களை நேரடியாக தினமும் சந்திக்கும் அரசு அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வார்டுகளிலும், திடீர் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான குழுக்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் ஆய்வு பணிகள் துவங்கும்.

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அலுவலர் விஜயகுமார் கூறுகையில், "கோவை மாவட்டத்தில், 2014 ஜனவரி முதல் தற்போது வரை, 495 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன; 24 ரெய்டு மேற்கொள்ளப்பட்டு, 29 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில், 11 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த 18 குழந்தைகள், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us