டிசம்பர் 7ம் தேதி நெய்வேலியில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
டிசம்பர் 7ம் தேதி நெய்வேலியில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
UPDATED : டிச 06, 2014 12:00 AM
ADDED : டிச 06, 2014 01:18 PM
அ நிறம் | அளவு
நெய்வேலி: நெய்வேலியில் நாளை (7ம் தேதி) காலை 8:30 மணிக்கு மாணவிகளுக்கும், மதியம் 1:00 மணிக்கு மாணவர்களுக்கும் வட்டம் -11ல் உள்ள லிக்னைட் ஹாலில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில், அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வை எதிர்கொள்வது மற்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது குறித்து கருத்துரைகள் வழங்கப்படுகின்றன.
பங்கேற்கும் மாணவ, மாணவிகள் குறிப்பெடுக்க இலவசமாக நோட்டு, பேனா, புளூபிரிண்ட் எனப்படும் தேர்வு முக்கிய வினாக்கள் தயாரிக்கும் முறை பற்றிய விளக்கப் புத்தகம், உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் கண்டிப்பாக சீருடையில் வர வேண்டும்.
