செங்கல்பட்டில் தினமலர் கல்விமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி
செங்கல்பட்டில் தினமலர் கல்விமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி
UPDATED : டிச 07, 2014 12:00 AM
ADDED : டிச 07, 2014 10:39 AM
செங்கல்பட்டு: தினமலர் நாளிதழ் சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்தப்படும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, இன்று(நவம்பர் 7), செங்கல்பட்டில் நடைபெறுகிறது.
அரசு தேர்வு எழுதவுள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி என்பதை விளக்குவதற்காகவும், மாணவர்கள் இடையேயான தேர்வு பயத்தை போக்குவதற்காகவும், தினமலர் நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும், ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி.சாலையில் உள்ள கிருஷ்ணா மஹாலில் இன்று(நவம்பர் 7), ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சியும், மதியம் பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சியும் நடக்கின்றன. மாணவ, மாணவியருக்கு, தேர்வில் வரும் முக்கிய வினாக்கள், புளூ பிரின்ட் புத்தகம் வழங்கப்படும். மாணவ, மாணவியர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பயன் பெறலாம்.
