மாநில அளவிலான கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!
மாநில அளவிலான கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!
UPDATED : டிச 22, 2014 12:00 AM
ADDED : டிச 22, 2014 11:40 AM
திருப்பூர்: மாநில அளவிலான கராத்தே போட்டியில், திருப்பூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர் முதலிடம் பெற்றனர்.
திருப்பூர் காந்தி நகர் முத்தண்ண செட்டியார் செல்லம்மாள் மஹாலில், யுனிவர்சல் சோடோகான் கராத்தே அமைப்பு சார்பில், மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. குமித்தே பிரிவில் நடந்த போட்டிகளில், பிற மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, போட்டியை துவக்கி வைத்தார். ஜப்பானை சேர்ந்த கராத்தே மாஸ்டர் கெனிச்சி புகாமிசூ, இவ்வமைப்பின் கேரள மாநில முதல்நிலை பயிற்சியாளர் ஹரிஹரன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
போட்டி முடிவுகள்
8 முதல் 13 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், ஹரி (இன்பேன்ட் ஜீசஸ்) முதலிடம், பிரவீன் (கொங்கு வேளாளர்) 2ம் இடம் பெற்றனர். மாணவியர் பிரிவில், வர்ஷா (பத்மாவதிபுரம் அரசு பள்ளி) முதலிடம், ரிந்தியா (செயின்ட் ஜோசப்) 2ம் இடம் பிடித்தனர். 14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், நாகராஜ் (அனுப்பர்பாளையம் அரசு பள்ளி) முதலிடம், வசந்த குமார் (பிஷப் உபகாரசாமி பள்ளி) 2ம் இடம் வென்றனர். மாணவியர் பிரிவில், பிரியதர்ஷினி (விஜயாபுரம் அரசு பள்ளி) முதலிடம், அபிராமி (நெசவாளர் காலனி அரசு பள்ளி) 2ம் இடம் பிடித்தனர்.
19 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், கராத்தே செய்முறை விளக்க பயிற்சி அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன. இதில், டான் கிரேடு வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதில், ரங்கசாமி (திருப்பூர்) முதலிடம், ஹரி (திருப்பூர்) 2ம் இடம், ஸ்டீபன் (கூடலூர்) 3ம் இடம் பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை, யுனிவர்சல் சோடோகான் கராத்தே அமைப்பு தலைமை பயிற்சியாளர் ரங்கசாமி செய்திருந்தார்.
