பலியான பாகிஸ்தான் மாணவர்களுக்கு தேனி மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலி
பலியான பாகிஸ்தான் மாணவர்களுக்கு தேனி மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலி
UPDATED : டிச 23, 2014 12:00 AM
ADDED : டிச 23, 2014 11:26 AM
அ நிறம் | அளவு
தேனி: பாகிஸ்தான் பெஷாவரில் பள்ளி வளாகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான மாணவர்களுக்கு, தேனி பி.சி.,பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.
தலைமை ஆசிரியை செலின் தலைமையில் மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவமனை வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
