தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புல்லட் ரயில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக காரக்பூர் ஐ.ஐ.டி.,யின் பிரத்யேக மையம்

புல்லட் ரயில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக காரக்பூர் ஐ.ஐ.டி.,யின் பிரத்யேக மையம்

புல்லட் ரயில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக காரக்பூர் ஐ.ஐ.டி.,யின் பிரத்யேக மையம்


UPDATED : ஜன 10, 2015 12:00 AM

ADDED : ஜன 10, 2015 06:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2015 12:00 AM ADDED : ஜன 10, 2015 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆராய்ச்சி: இந்திய ரயில்வே வாரியத்தின் சார்பில் அமைக்கப்படும் இந்த ஆராய்ச்சி மையம், காரக்பூர் ஐ.ஐ.டி., வளாகத்தில், 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.

இம்மையத்தின் பொறுப்பாளர், பேராசிரியர் சுப்க்ரான்சு ராய் கூறியதாவது: இந்திய ரயில்வே துறையை பொருத்தமட்டில், நான்கு பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது மிக அத்தியாவசியமாக உள்ளது. அதாவது, அதிவேக ரயில் தொழில்நுட்பங்கள், அதிக சரக்குகளை ஏற்றும் வகையில் திறனை மேம்படுத்துவது, அறிவார்ந்த பராமரிப்பு மற்றும் பாலிமர், ரப்பர் உள்ளிட்டவற்றை எவ்வாறு திறம்படக் கையாள்வது என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

அதற்கு, இப்புதிய மையம் விடை காணும்.அடுத்த 7 - 8 மாதங்களில், கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, ரயில்வே ஆராய்ச்சி மையம் தயார் நிலைக்கு வரும். ’இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற மத்திய அரசின் முழக்கத்திற்கு ஏற்ப, ரயில்வே தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் அனைத்தும், சொந்த திறனிலேயே மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக, புல்லட் ரயில் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுப் பணிகள், இப்புதிய மையத்தில் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும்.படிப்புகள்:இது தவிர, ரயில்வே தொடர்பான, எம்.டெக்., மற்றும் பொறியியல் படிப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளிவரும் பட்டதாரிகளுக்கு, ரயில்வே துறை மட்டுமின்றி, மத்திய அரசு விரைவில் துவக்க உள்ள ரயில்வே பல்கலையிலும் ஆசிரியர்களாக பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு, ராய் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us