தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நியூட்ரினோ ஆய்வகம்; மாணவர்களின் சந்தேகளுக்கு பதில்

நியூட்ரினோ ஆய்வகம்; மாணவர்களின் சந்தேகளுக்கு பதில்

நியூட்ரினோ ஆய்வகம்; மாணவர்களின் சந்தேகளுக்கு பதில்


UPDATED : ஜன 10, 2015 12:00 AM

ADDED : ஜன 10, 2015 07:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2015 12:00 AM ADDED : ஜன 10, 2015 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

’நியூட்ரினோ’ குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்புத்த ஐ.என்.ஓ.,(இந்தியா பேஸ்டு நியூட்ரினோ அப்சர்வேட்டரி) தொடர் கருத்தரங்கங்கள் நடத்துகிறது.

நேற்று, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கல்லூரியில் நடந்த கருத்தரங்கில், அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ஸ்டீபன் இன்பநாதன், ஐ.என்.ஓ., விஞ்ஞானி ரவீந்திரன், ஐ.எம்.எஸ்சி.,(இன்ஸ்டியூட் ஆப் மேத்தமெட்டிக்கல் சயின்ஸ்) பேராசிரியர் இந்துமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க பொட்டிப்புரம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது, நியூட்ரினோ ஆய்வகத்தில் ஆராய்ச்சிகள் துவங்கினால், உயர்கல்வி மாணவர்கள் பெறும் பயன்கள் உள்ளிட்டவை விளக்கப்பட்டன. மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஐ.என்.ஓ., சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள்:

மாணவி அபிநயா: ’நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தேனி மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன. தேனி மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கும், பொதுமக்கள் குடிநீர் ஆதாரமாகவும் முல்லை பெரியாறு பயன்படுகிறது. பெரியாற்றிலிருந்து நியூட்ரினோ ஆய்வகத்திற்கு தண்ணீர் ’பம்பிங்’ செய்யப்படுவதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதா.
பேராசிரியர் ஸ்டீபன் இன்பநாதன் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைக்க தேவையான ஒற்றை கல்லாலான கிரானைட் பாறையாக அம்பரப்பர் மலை உள்ளதால் ஆய்வகம் அமைக்க பொட்டிப்புரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆய்வகத்தில் பணி புரிபவர்களின் தேவைக்காக மட்டுமே ஆற்றிலிருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்படவுள்ளது. ஆராய்ச்சிக்கு தண்ணீர் தேவையில்லை.

கனிமொழி: பாறைகளை உடைத்தெடுக்க எந்த தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. பாறைகள் உடைக்கும் போது ஏற்படும் மாசு, ஓசோன் படலத்திற்கு பாதிப்பை உண்டாக்குமா. பாறை கழிவுகள் எவ்வாறு அப்புறப்படுத்தபடும்.

பேராசிரியர் இந்துமதி: ’கட்டிங் அண்ட் கவரிங்’ தொழில் நுட்பத்தில் பாறையை துளையிட்டு ஆய்வகம் அமையவுள்ளது. பாறையை உடைபட்ட பகுதியை மூடி மறைத்த பின் அடுத்த பகுதி உடைக்கப்படும். இதனால் மாசு ஏற்படும் வாய்ப்பு குறைவு. உடைக்கபடும் பாறைகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தபடும்.உத்தமபாளையம் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் முஜிபூர் ரகுமான்தேனி மாவட்டத்தில் ’நியூட்ரினோ’ ஆய்வகம் அமைவது, இயற்பியல் துறையில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பிற்காக வடமாநிலங்களுக்கு செல்லும் நிலை மாறும். நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவன் என்ற முறையில், இந்த திட்டம் நமது மாவட்டத்தில் செயல் படுவதை வரவேற்கிறேன்.

பேராசிரியர் இந்துமதி கூறியதாவது:ஆய்வகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய கடிதம் கிடைத்துள்ளது. நிதி மேலாண்மையை இந்திய அணு ஆராய்ச்சி கழகம் மேற்கொள்வதால், அணு கழிவுகள் கொட்டபடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முழுக்க துகள் இயற்பியல் குறித்த ஆராய்ச்சி மட்டுமே இங்கு செயல்படுத்தப்படவுள்ளது. ’கன்ட்ரோல் பிளாஸ்ட்’ என்ற நவீன தொழில் நுட்பத்தில் பாறையை உடைக்க, பகலில் இருமுறை மட்டும் வெடி வைக்கப்படும்.

இந்த முறையில், வெடி வைப்பதால் ஏற்படும் அதிர்ச்சி குறைவாக இருக்கும். சில நூறு மீ., க்கு அப்பால் அதிர்வை உணர முடியாது. மூன்று ஆண்டுகளில் பாதாள சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும், 50,000 டன் எடை கொண்ட 30,000 டிடெக்டர் (உணர்கருவி) அமைக்கும் பணிகள் 9 மாதங்கள் மேற்கொள்ளப்படும். அதிகபட்டசமாக அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஆராய்ச்சி துவங்கும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us