பெண்கள் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
பெண்கள் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
UPDATED : ஜன 11, 2015 12:00 AM
ADDED : ஜன 11, 2015 10:48 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது.
இதையடுத்து மதியம் பள்ளி மாணவியர் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இம்முகாம் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இன்று (11ம் தேதி] தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெறும். 12ம் தேதி கைவினை பெருட்கள் செய்வது குறித்த செயல்விளக்க பயிற்சியும், 13ம் தேதி சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம், விளையாட்டு போட்டிககள், சான்றிதழ் வழங்குதலுடன் முகாம் நிறைவு பெறும். துவக்க விழாவில், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் மகாலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.
