தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் கார்மல்கார்டன் மெட்ரிக் பள்ளி வெற்றி

பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் கார்மல்கார்டன் மெட்ரிக் பள்ளி வெற்றி

பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் கார்மல்கார்டன் மெட்ரிக் பள்ளி வெற்றி


UPDATED : ஜன 11, 2015 12:00 AM

ADDED : ஜன 11, 2015 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2015 12:00 AM ADDED : ஜன 11, 2015 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில், கார்மல்கார்டன் மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றது.

கோவைப்புதுார் வி.எல்.பி., ஜானகிஅம்மாள் கலை கல்லுாரி சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி, கல்லுாரியில் நடந்து வருகிறது. காலிறுதி முதல் போட்டியில், கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளி 4-2 கோல் கணக்கில் தேவாங்கா மேல்நிலை பள்ளியை வென்றது. கார்மல் கார்டன் பள்ளியின் கில்பர்ட் ரோசன் 2 கோல்களும், விஜயராகவன், அபிஷேக் தலா ஒரு கோலும், தேவாங்கா பள்ளியின் சூர்யநாராயணன், செந்தில்குமார் தலா ஒரு கோலும் அடித்தனர்.

* 2வது போட்டியில், கீர்த்திமான் பள்ளி 4-1 கோல் கணக்கில் பி.ஆர்.சித்தாநாயுடு பள்ளியை வென்றது. கீர்த்திமான் பள்ளியின் கார்த்திக்ராஜ், கார்த்திக், தினேஷ், விபின் தலா ஒரு கோலும், பி.ஆர்.சித்தாநாயுடு பள்ளி சக்திவேல் ஒரு கோலும் அடித்தனர்.

* 3வது போட்டியில், காருண்யா சர்வதேச பள்ளி 6-1 என்ற கோல் கணக்கில் கோபால்நாயுடு பள்ளியை வென்றது. காருண்யா பள்ளியின் பென்சிங், தொகானோகாங் தலா மூன்று கோல்களும்; கோபால்நாயுடு பள்ளியின் தினேஷ் ஒரு கோலும் அடித்தனர்.

* 4வது காலிறுதி போட்டியில், தேவாங்கா மெட்ரிக் பள்ளி 2-0 கோல் கணக்கில் பிச்சனுார் அரசு பள்ளியை வென்றது. தேவாங்கா மேல்நிலை பள்ளியின் இர்பான், முகேஷ் தலா ஒரு கோல் அடித்தனர்.

அரைஇறுதியில், காருண்யா பள்ளியுடன், கார்மல்கார்டன் பள்ளியும், மற்றொரு அரைஇறுதியில் கீர்த்திமான் பள்ளி, தேவாங்கா மெட்ரிக் பள்ளியுடன் சந்திக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us