தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"உயரம் இருந்தால், வாலிபால் போட்டியில் சிகரத்தை அடைவதற்கு தடையே இல்லை"

"உயரம் இருந்தால், வாலிபால் போட்டியில் சிகரத்தை அடைவதற்கு தடையே இல்லை"

"உயரம் இருந்தால், வாலிபால் போட்டியில் சிகரத்தை அடைவதற்கு தடையே இல்லை"


UPDATED : ஜன 21, 2015 12:00 AM

ADDED : ஜன 21, 2015 11:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2015 12:00 AM ADDED : ஜன 21, 2015 11:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: "உயரம் இருந்தால், வாலிபால் போட்டியில் சிகரத்தை அடைவதற்கு தடையே இல்லை. வாலிபால் பயிற்சியாளராகி, மாணவர்களை திறமையுள்ளவர்களாக உருவாக்குவதே என் கனவு" என்கிறார், வாலிபால் வீராங்கனை நந்தினி.

கோவை, தொண்டாமுத்துார், தேவராயபுரத்தை சேர்ந்தவர் நந்தினி, 21. தற்போது, அவினாசிலிங்கம் பல்கலையில் பி.பிஎட்., படித்து வருகிறார். குழு விளையாட்டில் லிப்ரோ ஆக களமிறங்குவதற்கான முயற்சியை, தேவராயபுரம், அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், 5ம் வகுப்பிலிருந்து துவக்கியுள்ளார்.

2004 ம் ஆண்டு கோவையில் நடந்த, மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் இவரது குழு முதலிடம் பெற்றதுதான் முதல் அனுபவம். தொடர்ந்து, பள்ளி, மாவட்ட, மாநில என பல போட்டிகளில் கலந்து இவரது குழு முதலிடம் கைப்பற்றியுள்ளது.

விளையாட்டின் முயற்சியால், 8 ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை, ஈரோடு, ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கி படிப்பதற்கான வாய்ப்பினை பெற்றார். 2006ம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் திருச்செங்கோடு, சென்னை, சேலம், தஞ்சாவூர், தர்மபுரி என அனைத்து இடங்களிலும் நடந்த, மாநில அளவிலான போட்டியில் முதல், இரண்டாவது இடத்தை இவரது குழு கைப்பற்றியுள்ளது.

கடந்த 2008ல், கேரளாவில் நடந்த, ஆல் இந்தியா வாலிபால்  போட்டியில், இரண்டாவது இடம் வென்றது. 2011 ம் ஆண்டு, ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், விஜயவாடாவில் நடந்த தேசிய வாலிபால் போட்டியில் பங்கேற்று, நான்காவது இடம் கைப்பற்றியுள்ளது. 2012ல், ஆந்திராவில் நடந்த, 16 வயதிற்குட்பட்டோருக்கான மினி தேசிய விளையாட்டு; அதே ஆண்டு, கேரளாவில் நடந்த தென்மண்டல இளைஞர் விளையாட்டு ஆகியவற்றில், இரண்டாவது இடத்தை இவரது குழு வென்றுள்ளது.

கடந்த 2012- 13ல், பி.கே.ஆர்., கல்லுாரியில் பி.காம் (சி.ஏ) படிப்பை தேர்ந்தெடுத்தார். 2013ல், ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், மேற்கு வங்காளத்தில் நடந்த, தேசிய வாலிபால் போட்டியில், பங்கேற்றுள்ளார். அடுத்தாண்டு கல்கத்தாவில் நடந்த, 18 வயதிற்குட்பட்டோருக்கான வாலிபால்; நடப்பாண்டில் சேலத்தில் நடந்த, மாவட்டங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டியில், மூன்றாவது இடத்தை இவரது குழு கைப்பற்றியுள்ளது.

2014ல், சென்னையில் நடந்த, சி.எம். டிராபி போட்டியில் ஈரோடு மாவட்டத்திற்காக விளையாடி, இவரது குழு மூன்றாவது இடம் பெற்றது. மாநில போட்டிகளில், பல்வேறு சிறப்பு விருதுகளை வாங்கியுள்ளது இவரது தனிச்சிறப்பு.

வாலிபால் வீராங்கனை நந்தினி கூறியதாவது: விளையாட்டுத்துறை மட்டுமின்றி, அனைத்திற்கும் குரு பக்தி அவசியமானது. தினசரி பயிற்சியை கடினமான முறையில் எடுக்காமல், ஸ்மார்ட் ஆக செய்தல், முழுஈடுபாடு, இலக்கினை நோக்கி பார்வை மாறாமல் இருத்தல் உள்ளிட்ட பண்பை எனக்கு கற்றுகொடுத்த பெற்றோர், பயிற்சியாளர்களே எனது ஒவ்வொரு வெற்றிக்கும் காரணமாவர்.

வாலிபால் என்றால் உயரமுள்ளவர்களால்தான் அதிகம் சாதிக்க முடிகிறது. கோவையை பொறுத்தவரை, பெரும்பாலும் அனைத்து மாணவர்களும் உயரம் குறைவாகவே இருக்கின்றோம். இதனால், தேசிய அளவில் தவறவிட்ட வாய்ப்புகள் அதிகம்.

மேலும், என் பயிற்சியாளர்கள் அனந்தகுமார், செந்தில், சிவக்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியை திலகவதி ஆகியோரின் ஒத்துழைப்பால்தான் என் பயணம் இன்றும் தொடர்கிறது. இவர்களைப்போல், நானும் சிறந்த பயிற்சியாளராக உருவாக வேண்டும் என்பதே என் லட்சியம். உயரம் அடைவதற்கான சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்; திறமையான மாணவர்களை விளையாட்டு உலகுக்கு அறிமுகப்படுத்துவதே எனது கனவு. இவ்வாறு நந்தினி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us