தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மொழிப்பாட தேர்வுகளுக்கு கோடு போட்ட விடைத்தாள் அளிக்க தேர்வுத்துறை முடிவு

மொழிப்பாட தேர்வுகளுக்கு கோடு போட்ட விடைத்தாள் அளிக்க தேர்வுத்துறை முடிவு

மொழிப்பாட தேர்வுகளுக்கு கோடு போட்ட விடைத்தாள் அளிக்க தேர்வுத்துறை முடிவு


UPDATED : ஜன 24, 2015 12:00 AM

ADDED : ஜன 24, 2015 02:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2015 12:00 AM ADDED : ஜன 24, 2015 02:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ம் தேதி முதல் 31ம் தேதி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரையும் நடக்கின்றன.

இதில், பிளஸ் 2 தேர்வை 9 லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வை 11 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதனால், கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாதிரி தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தம் செய்தபோது, கோடு போட்ட விடைத்தாள் அளித்தால், மாணவர்கள் கையெழுத்து சீராக இருக்கும் என, கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மொழிப்பாட தேர்வுகளுக்கு, கோடு போட்ட விடைத்தாள் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us