தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக அணிக்காக விளையாட சென்ற குன்னூரை சேர்ந்த மாணவருக்கு பாராட்டு

தமிழக அணிக்காக விளையாட சென்ற குன்னூரை சேர்ந்த மாணவருக்கு பாராட்டு

தமிழக அணிக்காக விளையாட சென்ற குன்னூரை சேர்ந்த மாணவருக்கு பாராட்டு


UPDATED : ஜன 27, 2015 12:00 AM

ADDED : ஜன 27, 2015 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2015 12:00 AM ADDED : ஜன 27, 2015 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்: அகில இந்திய ஹாக்கி போட்டியில், தமிழக அணிக்காக விளையாட சென்ற, குன்னூரை சேர்ந்த மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு மாணவர் பரிதி இளம்வழுதி. இந்திராநகர் பகுதியை சேர்ந்த இவர், ஹாக்கி நீலகிரீஸ் அமைப்பின் சார்பில் இயங்கி வரும் இனியா விளையாட்டு கழகத்தின் மூலம் பல்வேறு ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். லக்னோவில், 28ம் தேதி துவங்கி, 6ம் தேதி வரை நடக்க உள்ள, 14 வயதிற்கு உட்பட்டோருக்கான அகில இந்திய, 35வது கே.டி.சிங்., பாபு ஹாக்கி போட்டியில், தமிழக அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு, ஹாக்கி நீல்கிரீஸ் அமைப்பின் தலைவர் அனந்தகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் மூர்த்தி, சுரேஷ்குமார், பொருளாளர் ராஜா, செயலாளர் பாலமுருகன், துணை செயலாளர் உமாசங்கர், தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சகோதரர் சூசைராஜ், உடற்கல்வி ஆசிரியர் பிரேம்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். இவர் நேற்று, லக்னோ புறப்பட்டு சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us