தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை வேளாண் பல்கலையில் முதுநிலை தானிய சேமிப்பு அறிவியல் பாடத்திட்டம்

கோவை வேளாண் பல்கலையில் முதுநிலை தானிய சேமிப்பு அறிவியல் பாடத்திட்டம்

கோவை வேளாண் பல்கலையில் முதுநிலை தானிய சேமிப்பு அறிவியல் பாடத்திட்டம்


UPDATED : ஜன 28, 2015 12:00 AM

ADDED : ஜன 28, 2015 02:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2015 12:00 AM ADDED : ஜன 28, 2015 02:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கோவை வேளாண் பல்கலையில் வரும் கல்வியாண்டில் முதுநிலை தானிய சேமிப்பு அறிவியல் பாடத்திட்டம் கொண்டு வரப்படும், என பல்கலை துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: தானியங்களை சேமித்து வைக்கும் போது பூச்சி தாக்குதலை குறைக்க வேண்டும். தானியங்களின் சுவாசத்தை குறைக்கும் போது அவற்றை தாக்கும் பூச்சிகளின் சுவாசமும் இனப்பெருக்கமும் கட்டுப்படுத்தப்படும். கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் மூலம் தானியங்கள் இம்முறையில் பாதுகாக்கப்படுகின்றன.

வரப்புப் பகுதிகளில் எள், சூரியகாந்தி, மேரிகோல்டு செடிகளை வளர்த்து நடுவில் தானியங்களை வளர்த்தால் பூச்சிகள் வரப்பு செடிகளால் கவரப்பட்டு அறுவடைக்கு முந்தைய தானிய இழப்பு கட்டுப்படுத்தப்படும். அறுவடைக்குப் பின் ஏற்படும் தானிய இழப்பை கட்டுப்படுத்துவது குறித்து முதுநிலை அறிவியல் பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.

பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்களைத் தவிர மண்ணை வளப்படுத்துவதும் முக்கியமான விஷயம். குறிப்பிட்ட சதவீத அளவுக்கு மண்ணை வளப்படுத்தினால் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து தேவையில்லை. பல்கலைக்கு பயோ கன்ட்ரோல் முறைக்காக ரூ.112 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண் விவசாயிகளுக்கு பெண் அதிகாரிகள் மூலம் பயோ கன்ட்ரோல் முறையில் பயிற்சி அளிக்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us