தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித்துறையின் அறிவிப்புக்கு மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் வரவேற்பு

கல்வித்துறையின் அறிவிப்புக்கு மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் வரவேற்பு

கல்வித்துறையின் அறிவிப்புக்கு மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் வரவேற்பு


UPDATED : பிப் 08, 2015 12:00 AM

ADDED : பிப் 08, 2015 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2015 12:00 AM ADDED : பிப் 08, 2015 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கல்வித்துறையின் அறிவிப்புக்கு, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வித்துறை சார்பில், 65 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் சம்மந்தமாக, கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. இதில், புதுச்சேரியில் எந்த கல்லுாரியிலும் இல்லாத பாடங்களை கல்வித் தகுதியாக கேட்டிருந்தனர். இதுகுறித்து சங்கத்தின் சார்பில், முதல்வர், கல்வி அமைச்சர், செயலர் மற்றும் இயக்குனருக்கு மனு கொடுத்தோம்.

தற்போது, கல்வித்துறை சர்வ சிக்ஷா அபியான் மற்றும் ரஷ்த்ரியா திட்ட பணிக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம், ஏற்கனவே தகுதி இருந்தும் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழைய முறையில் படித்த இளநிலைப் பட்டம் பெற்றவர்களும், புதிய முறையில், குறிப்பாக செயல்பாட்டு வழியில் பயின்று முடித்த மாணவர்களும் பயன்பெறுமாறு திருத்தி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us