கோ-கோ போட்டியில் விருகம்பாக்கம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம்
கோ-கோ போட்டியில் விருகம்பாக்கம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம்
UPDATED : பிப் 13, 2015 12:00 AM
ADDED : பிப் 13, 2015 03:01 PM
அ நிறம் | அளவு
விருகம்பாக்கம்: மண்டல அளவிலான, குடியரசு தின கோ-கோ போட்டியில், விருகம்பாக்கம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி, அணி இரண்டாம் இடம் பெற்றது.
புதுக்கோட்டையில், குடியரசு தின சீனியர் கோ-கோ போட்டிகள் நடந்தன. அதில், 15 மண்டல அணிகள் பங்கேற்றன. சென்னை மண்டலம் சார்பில், விருகம்பாக்கம் மேல்நிலைப் பள்ளி அணி பங்கேற்றது.
இறுதி போட்டியில், ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி (சென்னை) அணி, 10-12 என்ற புள்ளிக்கணக்கில், சி.ஆர்.ஆர்., மெட்ரிக் (கோவை) அணியிடம், தோல்வி அடைந்து, இரண்டாம் இடத்தை பெற்றது.
