எல்.கே.ஜி. மாணவியை தாக்கிய ஆசிரியைகள் - போலீசில் புகார்
எல்.கே.ஜி. மாணவியை தாக்கிய ஆசிரியைகள் - போலீசில் புகார்
UPDATED : பிப் 13, 2015 12:00 AM
ADDED : பிப் 13, 2015 03:03 PM
மதுரை: மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் மூவேந்தன். இவரது மகள் கவுசல்யா, புதுார் பகுதி மெட்ரிக் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி., படிக்கிறார்.
இவரை ஆசிரியைகள் இருவர் முன்விரோதம் காரணமாக தாக்கியதாக தல்லாகுளம் போலீசில் மூவேந்தன், வக்கீல் முத்துக்குமார் புகார் அளித்தனர். கன்னம், மூக்கில் காயம்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் கவுசல்யா சிகிச்சை பெறுகிறார்.
மூவேந்தன் கூறியதாவது: வகுப்பு ஆசிரியை நான்கு மாதங்களுக்கு முன் என் மாமனார் வீட்டில் வாடகைக்கு குடியேற வந்தார். ஆனால் வாடகை கூடுதலாக இருப்பதாககூறி சென்றுவிட்டார். இதன் காரணமாகவே கவுசல்யாவை தாக்கியிருக்க வேண்டும். நாங்கள் நேரில் கேட்டபோது, தாக்கவில்லை என்றார். பின், வேறு வகுப்பில் கவுசல்யாவை சேர்த்தோம். அந்த வகுப்பு ஆசிரியையும் தாக்கியிருக்கிறார், என்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.
