ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது கணினித் துறை
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது கணினித் துறை
UPDATED : பிப் 13, 2015 12:00 AM
ADDED : பிப் 13, 2015 03:06 PM
கோவை: இந்துஸ்தான் கல்லுாரியில் நடந்த விளையாட்டுப் போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, கணினித் துறை பெற்றது.
கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், 17ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள், சமீபத்தில் நடந்தன. 100, 200, 400, 800, 1,500 மீ., நீளம் தண்டுதல், குண்டு மற்றும் வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளும், குழு விளையாட்டில் வாலிபால், ஹேண்ட்பால், கால்பந்து, கூடைப்பந்து, செஸ், கேரம், எறிபந்து ஆகிய போட்டிகளும் நடந்தன.
தடகளப் போட்டியில், முதலாண்டு மாணவர் ஆசிஸ், 100, 200 மீ., நீளம் தாண்டுதல், தத்தித் தாண்டுதல் போட்டியில், 20 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். மாணவியர் பிரிவில், பயோடெக் மாணவி சத்தியா, பி.சி.ஏ., மாணவி அனோமா ஆகியோர் தலா 10 புள்ளிகளுடன், தனி நபருக்கான சாம்பியன் பட்டம் பெற்றனர்.
நடப்பாண்டுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, கணினி சார்ந்த துறை தட்டிச் சென்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி மேத்யூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசு வழங்கினார்.
