தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவில் அனைத்து நிகர்நிலை பல்கலை மாணவர்களுக்கான கால்பந்து போட்டி

மாநில அளவில் அனைத்து நிகர்நிலை பல்கலை மாணவர்களுக்கான கால்பந்து போட்டி

மாநில அளவில் அனைத்து நிகர்நிலை பல்கலை மாணவர்களுக்கான கால்பந்து போட்டி


UPDATED : பிப் 13, 2015 12:00 AM

ADDED : பிப் 13, 2015 03:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2015 12:00 AM ADDED : பிப் 13, 2015 03:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநில அளவில், அனைத்து நிகர்நிலை பல்கலை மாணவ, மாணவியருக்கான கால்பந்து போட்டி, 20ம் தேதி முதல், 22ம் தேதி வரை, காருண்யா பல்கலையில் நடக்கிறது.

காருண்யா பல்கலை உடற்கல்வி இயக்குனர் காலேப்ராஜ் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குனர் சத்தியகுமார் ஆகியோர் கூறியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியுதவி மூலம் அனைத்து நிகர்நிலை பல்கலை மாணவ, மாணவியருக்கான கால்பந்து போட்டி, இரண்டாம் ஆண்டாக கோவை காருண்யா பல்கலையில் நடத்தப்படுகிறது.

சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் ஆகிய இடங்களை சேர்ந்த, 20 நிகர்நிலை பல்கலை அணியினர் போட்டியில் பங்கேற்கின்றனர். போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் மட்டும், தமிழ்நாடு அனைத்து பல்கலை கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us