தனியார் பள்ளியை கண்டித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த பெற்றோர்
தனியார் பள்ளியை கண்டித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த பெற்றோர்
UPDATED : பிப் 17, 2015 12:00 AM
ADDED : பிப் 17, 2015 11:01 AM
அ நிறம் | அளவு
சென்னை: தனியார் பள்ளியை கண்டித்து, பெற்றோர், கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில், பாடநேரத்தை குறைத்து, ஒரே வகுப்புக்கு காலையில் ஒரு பள்ளிக்கூடம், மாலையில் ஒரு பள்ளிக்கூடம் என, சுழற்சி முறையில் பாடம் கற்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மனதளவில் பாதிக்கப்பட்டனர்.
பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, போலீசாரின் அனுமதியின்றி போராட்டம் நடத்தினர். மாலையில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போராட்டத்தை நீட்டிக்க அனுமதி கோரியும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் மனு அளித்தனர்.
