தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலாண்டு தேர்வு வினாத்தாள்; விதிமுறை மீறி பணம் வசூல் புகார்

காலாண்டு தேர்வு வினாத்தாள்; விதிமுறை மீறி பணம் வசூல் புகார்

காலாண்டு தேர்வு வினாத்தாள்; விதிமுறை மீறி பணம் வசூல் புகார்


UPDATED : அக் 07, 2015 12:00 AM

ADDED : அக் 07, 2015 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2015 12:00 AM ADDED : அக் 07, 2015 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு
: காலாண்டு தேர்வு வினாத்தாளுக்கு பணம் வசூலித்ததாக பள்ளி கல்வி துறை மீது புகார் எழுந்துள்ளது.
 

தமிழகத்தில் பயிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் பாட புத்தகம், நோட்டு, சீருடை, காலணி, பஸ் பாஸ், மதிய உணவு, சைக்கிள், லேப்டாப், கல்வி உதவி தொகை என அனைத்தையும் தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதனால் கல்வி கற்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. காலாண்டு தேர்வு கடந்த, 25ம் தேதியுடன் நிறைவு பெற்றன. தேர்வு வினாத்தாளுக்கு பள்ளி கல்வி துறை சார்பில் அலுவலர்கள் பெருந்தொகை வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. 

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்க பள்ளி முதல் நடுநிலை பள்ளி வரை காலாண்டு வினாத்தாளுக்கு என ஒவ்வொரு மாணவனிடம் இருந்தும் தலா ரூ.ஏழு ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதே போல் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் வகுப்புக்கு ஏற்ப பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வினாத்தாளுடன், விடை தாளும் உள்ளது. முன்பு கலைமகள் சபா மூலம் வினாத்தாள் வந்தது. அப்போது ரூ.2.50 வரை மட்டுமே வசூலித்தனர். தற்போது தனியார் அச்சகத்தில் வினாத்தாள் அச்சிடப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் வசூலிக்கும் தொகையை ஒட்டு மொத்தமாக தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு வழங்குகின்றனர். 

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலாண்டு துவங்கும் முன்னரே வினாத்தாளுக்கு உரிய தொகையை செலுத்தி விட்டனர். ஆனால் அதற்கு உரிய ரசீது ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை. முன்பு ஒவ்வொரு வகுப்புக்கும் பாட வாரியமாக பிரித்து வினாத்தாள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளி குறித்து கேட்டு அனைத்து பாட வினாத்தாள்களையும் ஒன்றாக வழங்குகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒவ்வொரு பாட வாரியமாக, வகுப்பு வாரியாக பிரித்து வழங்க வேண்டி உள்ளது. வேறு ஏதாவது ஒரு மீட்டிங்கிற்கு செல்லும் போது வினாத்தாள்களை அங்கு இருக்கும் ஆசிரியர்களிடம் வழங்கி விடுகின்றனர். முன்பு வினாத்தாள் சீல் வைத்து தான் வரும். ஆனால் தற்போது அவ்வாறு வருவது கிடையாது. தனியார் அச்சகத்தில் வழங்குவதால் பணம் வசூலிக்கின்றனர். 

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்தையுமே இலவசமாக வழங்கிவ ருகிறது. ஆனால் வினாத்தாளுக்கு மட்டும் பணம் வசூலிப்பது புதிய நடைமுறையாக உள்ளது. பள்ளி கல்வி துறையினர் தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். ஈரோடு கலெக்டர் பிரபாகர் கூறும்போது, இதுகுறித்து விசாரிக்கிறேன், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us