நூலகர் மற்றும் உதவி நூலகர் பணி; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
நூலகர் மற்றும் உதவி நூலகர் பணி; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
UPDATED : ஏப் 29, 2016 12:00 AM
ADDED : ஏப் 29, 2016 01:36 PM
சென்னை
:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்திய நூலகர் மற்றும் உதவி நூலகர் பதவிகளுக்கான
தேர்வில், தேர்வு செய்யப்பட்ட
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து
தேர்வாணையம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
நூலகர்
மற்றும் உதவி நூலகர் பதவிகளில் உள்ள 29
காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 01.08.2015 மற்றும் 02.08.2015 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 65 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு
வரும் 09.05.2016 மற்றும் 10.05.2016 ஆகிய நாட்களில் அழைக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அழைப்பாணை விவரம் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
