தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பதவி ஏற்ற மூன்றே நாளில் பீஹார் கல்வி அமைச்சர் ராஜினாமா

பதவி ஏற்ற மூன்றே நாளில் பீஹார் கல்வி அமைச்சர் ராஜினாமா

பதவி ஏற்ற மூன்றே நாளில் பீஹார் கல்வி அமைச்சர் ராஜினாமா


UPDATED : நவ 20, 2020 12:00 AM

ADDED : நவ 20, 2020 05:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2020 12:00 AM ADDED : நவ 20, 2020 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாட்னா:
பீஹார் கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற மேவாலால் சவுத்ரி 67 மூன்றே நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2012ல் பாகல்பூரில் உள்ள பீஹார் விவசாய பல்கலை துணை வேந்தராக மேவாலால் சவுத்ரி பதவி வகித்தார்.அப்போது உதவி பேராசிரியர்கள் இளநிலை ஆராய்ச்சியாளர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2015ல் துணை வேந்தர் பதவியை ராஜினாமா செய்த சவுத்ரி ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஊழல் புகார் தொடர்பாக மேவாலால் சவுத்ரி மீது 2017ல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து &'சஸ்பெண்ட்&' செய்யப்பட்டார்.
இந்நிலையில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட சவுத்ரிக்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 16ல் அமைச்சராக பொறுப்பேற்றார். 
இந்நிலையில் &'ஊழல் புகாரில் சிக்கியவருக்கு கல்வி அமைச்சர் பதவி கொடுப்பதா&' என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து அமைச்சர் பதவியை மேவாலால் சவுத்ரி நேற்று ராஜினாமா செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us