புதுச்சேரி ஆதித்யா பள்ளி மாணவன் நீட் தேர்வில் மாநிலத்தில் முதலிடம்
புதுச்சேரி ஆதித்யா பள்ளி மாணவன் நீட் தேர்வில் மாநிலத்தில் முதலிடம்
UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 02:02 AM
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மே 7 ம் தேதி நடந்தது. புதுச்சேரியில் நீட் தேர்விற்கு 5,797 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 5,715 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் முடிவு நேற்று வெளியானது. புதுச்சேரியில் தேர்வெழுதியவர்களில் 3,140 தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரமம் பள்ளி மாணவர் அசோக்குமார், 720க்கு 700 மதிப்பெண் பெற்று புதுச்சேரி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.இவர் அகில இந்திய அளவிலான ரேங்க் பட்டியலில் பொது பிரிவில் 287வது இடத்தையும், ஓ.பி.சி., பிரிவில் 58வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்த தேவேந்திரன், தேவி தம்பதியின் மகனான அசோக்குமார், புதுச்சேரி ஆதித்யா பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2வரை பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அசோக்குமாரை, ஆதித்யா பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
